காதலர் தினத்தை முன்னிட்டு வெளியிடப்பட்ட ஏழு கடல் ஏழு மலை திரைப்படத்தின் முதல் பாடல்
#TamilCinema
#Director
#release
#valentine
#Movies
#Kollywood
#Song
Prasu
11 months ago

பாலுமகேந்திராவிடம் பல வருடங்கள் உதவி இயக்குநராக இருந்துவிட்டு கற்றது தமிழ் படத்தை முதன்முறையாக இயக்கினார் ராம்.
அதனையடுத்து அவர் இயக்கிய தங்க மீன்கள், பேரன்பு ஆகிய படங்கள் அனைத்துமே பெரிதாக பேசப்பட்டது,
தற்போது நிவின் பாலி, அஞ்சலி, சூரி உள்ளிட்டோரை வைத்து ஏழு கடல் ஏழு மலை என்ற படத்தை இயக்கியிருக்கிறார்.யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்திருக்கிறார்.
இன்று காதலர் தினத்தை முன்னிட்டு படத்திலிருந்து ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியாகியிருக்கிறது.
‘போர் ஏதும் இல்லை வேறேதும் இல்லை ஆனாலும் பூமி அதிர்வது ஏன் சொல்லடி’ என்று தொடங்கும் அந்தப் பாடலை நடிகர் சித்தார்த் பாடியிருக்கிறார். மதன் கார்க்கி பாடலை எழுதியிருக்கிறார்.
தற்போது வெளியான ஃபஸ்ட் சிங்கிள் சோசியல் மீடியாவில் வைரலாகிக் கொண்டிருக்கிறது.



