நடிகர் பிருத்விராஜின் வாழ்க்கையை மாற்றிய நடிகை ரேவதி - என்ன நடந்தது?

#Cinema #Actor #Actress #Lifestyle #Movie #Kollywood
Prasu
9 months ago
நடிகர் பிருத்விராஜின் வாழ்க்கையை மாற்றிய நடிகை ரேவதி - என்ன நடந்தது?

மொழி திரைப்படம் மூலம் ரசிகர்களிடம் பிரபலமானவர் பிரித்விராஜ். இந்த படத்தில் இவரும், பிரகாஷ்ராஜும் அடித்த லூட்டியை ரசிகர்கள் அவ்வளவு சுலபத்தில் மறந்திருக்கமாட்டார்கள். 

இவர் பிறந்து வளர்ந்து எல்லாம் சென்னையில்தான். தி.நகரில் ஒரு பள்ளியில் படித்தார். அதன்பின் குன்னூரிலும் படித்திருக்கிறார். இவரின் பெற்றோர் கேரளாவுக்கு சென்றதும் அங்கேயே செட்டில் ஆனது இவரின் குடும்பம். 

மலையாளத்தில் அதிக படங்களில் நடித்தாலும் தமிழில் பல படங்களில் நடித்திருக்கிறார். கே.வி.ஆனந்த் இயக்கிய முதல் படமான கனா கண்டேன் படத்தில் வில்லனாக அறிமுகமானார். 

images/content-image/1707939593.jpg

அதன்பின் மொழி, காவிய தலைவன், வெள்ளித்திரை, நினைத்தாலே இனிக்கும் உள்ளிட்ட சில படங்களில் நடித்திருக்கிறார். மலையாளத்தில் நடித்து வரும் சிறந்த நடிகர்களில் பிருத்விராஜும் ஒருவர். பல திரைப்படங்களில் அசத்தலான நடிப்பை கொடுத்திருக்கிறார். 

லூசிபர், புரோ டாடி ஆகிய படங்களை இயக்கியும் இருக்கிறார். லூசிபர் படத்தை தெலுங்கில் ரீமேக் செய்து சிரஞ்சீவி நடித்தார். அங்கும் அது சூப்பர் ஹிட் அடித்தது. பிரித்விராஜ் சில படங்களை தயாரித்தும் இருக்கிறார். சில படங்களில் பாடல்களை பாடியிருக்கிறார். 

சில ஹிந்தி படங்களிலும் நடித்திருக்கிறார். இவர் நந்தனம் என்கிற திரைப்படத்தில்தான் அறிமுகமானார். இந்த படத்தை மலையாளத்தில் பல ஹிட் படங்களை இயக்கிய ரஞ்சித் இயக்கியிருந்தார்.

images/content-image/1707939603.jpg

இந்த படத்தில் ரேவதி, நவ்யா நாயர், சித்திக், இன்னசன்ட் என பலரும் நடித்திருந்தனர். ஆனால், இந்த படத்தில் நடிக்கும்போது பிரித்விராஜ் ஆர்வமே இல்லாமல் இருந்துள்ளார். நடிப்பு நமக்கு இது செட் ஆகுமா?.. இதையே நமது கேரியராக அமைத்து கொள்ளலாமா? என பல கேள்விகளும், குழப்பங்களும் அவரிடம் இருந்துள்ளது.

இதை படப்பிடிப்பில் இருந்த ரேவதி மட்டுமே கவனித்துள்ளார். ஒருநாள் பிருத்வியை அழைத்து ‘உனக்கு சினிமாவில் நல்ல எதிர்காலம் இருக்கு. அதற்கான திறமையும் உன்னிடம் இருக்கிறது. 

உன் ஆர்வத்தை விட்டுவிடாதே’ என சொன்னாராம். ரேவதி சொன்னது உற்சாகத்தை கொடுக்க குழப்பங்கள் தீர்ந்து களத்தில் இறங்கி கலக்கியிருக்கிறார் பிருத்விராஜ்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!