1985ல் 100 நாட்களுக்கு மேல் ஓடி அதிக வசூல் ஈட்டிய தமிழ் படம்
தங்க மகன் படத்திற்கு பிறகு சூப்பர் ஸ்டாருக்கு அடுத்ததாக வெள்ளி விழா கொண்டாடிய படம் 1985 தீபாவளிக்கு வெளிவந்த படிக்காதவன்.
இந்த படத்தை தயாரித்தது N வீராசாமி அவர்கள் நடிகர் திலகமும் சூப்பர் ஸ்டாரும் இந்த படத்தில் அருமையான நடிப்பில் கலக்கியிருப்பார்கள்.
சூப்பர் ஸ்டாரின் நடிப்புக்கு இந்த படம் ஒரு மைல் கல் தம்பியிடம் பாசத்தை காட்டுமிடமாகட்டும் ஆவேசத்தில் திட்டுமிடமாகட்டும் நடிகர் திலகத்தின் மேல் வைத்திருக்கும் மரியாதையை தலைகுனிந்து நிற்குமிடமாகட்டும் ஊர்த் தெரிஞ்சுகிட்டேன் பாடலில் தன்னுடைய வேதனையை அம்பிகாவிடம் சொல்லி கலங்குமிடமாகட்டும் நடிப்பில் பட்டையை கிளப்பி இருப்பார்.
கடைசி கோர்ட் காட்சிகளில் நடிகர் திலகம் தன்னுடைய இயல்பான நடிப்பால் படம் பார்ப்போரை சீட் நுனியில் உட்கார வைத்து விடுவார்.
இசைஞானியின் இசையில் பாடல்கள் அனைத்தும் சூப்பர் ஆரம்பம் முதல் இறுதி வரை கொஞ்சம் கூட போரடிக்காமல் படத்தை இயக்கியிருப்பவர் ராஜசேகர்.
இந்த படம் தமிழகத்தில் பல இடங்களில் 100 நாட்களுக்கு மேல் ஓடி சென்னையில் ரிலீஸ் செய்யப்பட்ட ஐந்து தியேட்டரிலும் 100 நாட்களுக்கு மேல் ஓடி பால அபிராமி தியேட்டரில் 210 நாட்களும் மதுரை சென்ட்ரல் தியேட்டரில் 176 நாட்களும் ஓடியது.
சென்னையில் 1985 ஆம் வருடத்தில் ஐந்து தியேட்டரில் 100 நாட்களுக்கு மேல் ஓடி அந்த ஆண்டின் அதிக வசூல் ஈட்டிய படமாகவும் படிக்காதவன் அமைந்தது