AI தொழிநுட்பத்தால் விஜயின் GOAT உடன் இணைந்த கேப்டன் விஜயகாந்த்

#TamilCinema #technology #Vijay #Movie #Kollywood #Vijayakanth #poster #AI
Prasu
2 years ago
AI தொழிநுட்பத்தால் விஜயின் GOAT உடன் இணைந்த கேப்டன் விஜயகாந்த்

விஜய்யின் 68வது படமான GOAT ஷூட்டிங் வேகமாக நடைபெற்று வருகிறது. வெங்கட் பிரபு இயக்கத்தில் எஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படம் பிரம்மாண்டமான பட்ஜெட்டில் உருவாகிறது. 

அதேபோல் விஜய், பிரசாந்த், மோகன், பிரபுதேவா உள்ளிட்ட பலர் நடிக்கும் மல்டி ஸ்டார்ஸ் படம் என்பதும் குறிப்பிடத்தக்கது. 

இதனால் தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் படத்துக்கு அதிக எதிர்பார்ப்பு காணப்படுகிறது. இந்நிலையில் கோட் படத்தில் விஜயகாந்தின் கெட்டப் எப்படி இருக்கும் என ஒரு போஸ்டர் வெளியாகியுள்ளது. 

பொங்கல் ஸ்பெஷலாக கோட் படத்தில் இருந்து சிறப்பு போஸ்டரை படக்குழு வெளியிட்டது. 

அதில் விஜய், பிரசாந்த், பிரபுதேவா, அஜ்மல் ஆகியோர் ராணுவ உடையில் மெஷின் கன் வைத்து மிரட்டலாக போஸ் கொடுத்திருந்தனர். அதில் கேப்டன் விஜயகாந்தும் இருப்பதாக ஒரு போஸ்டர் வெளியாகியுள்ளது. 

ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்றுள்ள இந்த ஃபேன்மேட் போஸ்டர், படக்குழுவினருக்கே சர்ப்ரைஸ்ஸாக அமைந்துள்ளது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4