நாணயக் கொள்கை தொடர்பில் மத்திய வங்கி வெளியிட்டுள்ள முக்கிய தகவல்!

#SriLanka #Bank #Central Bank #money
Mayoorikka
2 years ago
நாணயக் கொள்கை தொடர்பில் மத்திய வங்கி வெளியிட்டுள்ள முக்கிய தகவல்!

இலங்கை மத்திய வங்கி 2023ஆம் ஆண்டின் 16ஆம் இலக்க இலங்கை மத்திய வங்கிச் சட்டத்தின் தேவைப்பாடுகளுடன் இசைந்து செல்லும் விதத்தில் நேற்று (15) பெப்ரவரி மாத்திற்கான நாணயக் கொள்கை அறிக்கை - 2024 யினை வௌியிட்டது.

 இவ்வறிக்கையின் உள்ளடக்கமானது முக்கியமாக 2024 ஜனவரி மாத மீளாய்வின் போது நாணயக் கொள்கைத் தீர்மானத்தினை உருவாக்குவதில் இலங்கை மத்திய வங்கியின் நாணயக் கொள்கைச் சபையினால் பரிசீலனையிற்கொள்ளப்பட்ட தகவல்களை அடிப்படையாகக் கொண்டுள்ளது.

 பொருளாதாரம் தொடர்பில் குறிப்பாக, பணவீக்கம் மற்றும் பொருளாதார வளர்ச்சி தொடர்பாக முன்னோக்கிய பார்வையிலமைந்த நோக்குகளை வழங்கும் பொருட்டு மத்திய வங்கியினால் வெளியிடப்பட்ட இரண்டாவது நாணயக் கொள்கை அறிக்கையாக இது காணப்படுகின்றது. 

 உள்நாட்டு மற்றும் உலகளாவிய துறைகளின் தற்போதைய மற்றும் எதிர்பார்க்கப்படுகின்ற அபிவிருத்திகள் என்பவற்றினைக் கருத்திற்கொண்டு, பணவீக்கம் மற்றும் பொருளாதார வளர்ச்சி என்பன மீதான எறிவுகளிற்கான இடர்நேர்வுகளின் மதிப்பீடொன்றினை வழங்குவதனையும் அறிக்கை நோக்காகக் கொண்டுள்ளது.

 இவ்வறிக்கையினூடாக, மத்திய வங்கியின் அண்மைய நாணயக் கொள்கைத் தீர்மானங்களுக்கான நியாயபூர்வதன்மையினை தொடர்பூட்டுவதனூடாக அதன் வெளிப்படைத்தன்மையும் பொறுப்புக்கூறும் தன்மையினையும் மேம்படுத்துவதற்கு மத்திய வங்கி முயற்சிக்கின்றது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4