முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரடியாக மக்கள் முதல்வர் திட்டத்தின் கீழ் ஆயிரம் இளைஞர்களுக்கு பணி நியமனம்

#India #M. K. Stalin #Job Vacancy #people #Young
Mugunthan Mugunthan
3 months ago
முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரடியாக மக்கள் முதல்வர் திட்டத்தின் கீழ் ஆயிரம் இளைஞர்களுக்கு பணி நியமனம்

“மக்களுடன் முதல்வர்” திட்டத்தின் கீழ் நலத்திட்ட உதவிகள் மற்றும் 1,598 இளைஞர்களுக்கு அரசுப் பணி நியமன ஆணைகளை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். 

அரசு அலுவலர்களை தேடிச் சென்று மக்கள் மனுக்களை தந்து குறைகளைக் தெரிவித்து, தீர்வு காண்பது என்பது இதுவரை நடைமுறையாக இருந்தது. ஆனால், மக்களின் நலன் நாடி நாள்தோறும் திட்டங்களை வகுத்துச் செயல்படுத்திடும்தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள். 

மக்களைத் தேடி அதிகாரிகள் சென்று குறை கேட்டுத் தீர்த்துவைத்திட வேண்டும் என்று விரும்பினார்.முதலமைச்சர் அவர்கள் ஆட்சிப் பொறுப்பேற்றது முதல் மக்கள் அளிக்கும் கோரிக்கை மனுக்கள் மீது உடனுக்குடன் நடவடிக்கை எடுத்து அவர்களின் குறைகளைத் தீர்ப்பதில் முன்னுரிமை அளித்து வருகிறார்கள்.