ராமம் ராகவம் திரைப்படத்தின் கிளிம்ப்ஸ் காதலர் தினத்தையொட்டி வெளிவந்துள்ளது
#Cinema
#TamilCinema
#release
#Movie
#Telugu
Mugunthan Mugunthan
6 months ago
இயக்குனர் தன்ராஜ் கொரனானி இயக்கத்தில் தயாராகி இருக்கும் திரைப்படம் ‘ராமம் ராகவம்’. இதில் சமுத்திரக்கனி, ஹரிஷ் உத்தமன், தன்ராஜ் கொரனானி, சத்யா, மோக்ஷா சென் குப்தா, பிரமோதினி, ஸ்ரீனிவாஸ் ரெட்டி, பிரித்விராஜ் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.
துர்கா பிரசாத் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு அருண் இசையமைத்திருக்கிறார். திரைப்படத்தை சிலேட் பென்சில் ஸ்டோரீஸ் பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ப்ருத்வி பொலவரபு தயாரித்திருக்கிறார்.
தெலுங்கு, தமிழ் என இரு மொழிகளில் தயாராகும் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் அண்மையில் வெளியாகி பெரும் கவனத்தை ஈர்த்தது. காதலர் தினத்தை முன்னிட்டு இப்படத்தின் கிளிம்ப்ஸ் வெளியிடப்பட்டிருக்கிறது.