பொருளாதார நெருக்கடி காரணமாக கனடாவில் மருந்து வகைகளை தவிர்க்கும் மக்கள்

#Canada #people #meditation #Crash #Canada Tamil News #Economic
Mugunthan Mugunthan
3 months ago
பொருளாதார நெருக்கடி காரணமாக கனடாவில் மருந்து வகைகளை தவிர்க்கும் மக்கள்

கனடாவில் சுமார் 25 வீதமானவர்கள் மருந்து வகைகள் உட்கொள்வதனை தவிர்த்து வருகின்றனர். மருத்துவர்களினால் பரிந்துரைக்கப்படும் மருந்து வகைகளை கொள்வனவு செய்ய முடியாத காரணத்தினால் இவ்வாறு மக்கள் மாத்திரைகளை தவிர்த்து வருகின்றனர்.

 Heart and Stroke and the Canadian Cancer Society என்னும் அமைப்பினால் இந்த நடத்தப்பட்ட கருத்துக் கணிப்பு மூலம் இந்த விடயம் தெரியவந்துள்ளது. மருத்துவர்களின் பரிந்துரைக்கு அமைய தொடர்ச்சியாக உட்கொள்ள வேண்டிய மருந்து வகைகள் தவிர்க்கப்படுவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

images/content-image/1708089717.jpg

 சிலர் முழுவதுமாக தவிர்ப்பதாகவும் சிலர் பகுதியளவில் மருந்து உட்கொள்வதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. பொருளாதார நெருக்கடி நிலைமைகளினால் இவ்வாறு மருந்து உட்கொள்வது தவிர்க்கப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

 நாட்பட்ட நோய்களை உடைய பத்து வீதமான கனடியர்கள் மருந்து வாங்குவதற்கு போதியளவு பொருளாதார வசதியின்மையினால், அவசர சிகிச்சைப் பிரிவுகளில் அனுமதிக்கப்படும் நிலைமை உருவாகியுள்ளது. புற்று நோய் போன்ற நோய்களின் போது மருந்து வகைகளை கொள்வனவு செய்வதற்கு முடியாத நிலைமை காணப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.