6 ஆம் தரத்திற்கான எந்தவொரு மொடியூலும் நீக்கப்படவில்லை - ஹரிணி!

#SriLanka #ADDA #Harini Amarasooriya #ADDAADS #SHELVA #SHELVAFLY #ADDAFLY #ADDAPOOJA
Abi
1 hour ago
6 ஆம் தரத்திற்கான எந்தவொரு மொடியூலும் நீக்கப்படவில்லை  - ஹரிணி!

6 ஆம் வகுப்பு புத்தகங்கள் எவையும் அகற்றப்படவில்லை. ஒரேயொரு புத்தகத்தில் இருந்த பிழையும் மாற்றீடு செய்யப்பட்டு இந்த ஆண்டுக்குள் அனைத்துப் புத்தகங்களும் விநியோகிக்கப்படும் என்று பிரதமரும் கல்வி அமைச்சருமான ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.

பாராளுமன்றில் இன்று இடம்பெற்ற அமர்வில் எதிர்க்கட்சி உறுப்பினர் ஒருவர் எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கையில் அவர் இதனைத் தெரிவித்தார். எதிர்க்கட்சி உறுப்பினர் கேள்வி எழுப்புகையில், கல்வி மறுசீரமைப்பில் 6 ஆம் தர புத்தகங்கள் அகற்றப்பட்டனவா? அகற்றப்பட்ட புத்தகங்களுக்கு எவ்வளவு நிதி செலவாகியுள்ளது. 

இந்தப் பாடப்புத்தகங்களுக்கு நிதியை செலவிட்டமை வீண் விரயம். அதனை ஒரு புறத்தில் ஊழல் என்றே சொல்ல முடியும். இந்த விடயத்தில் கல்வி வெளியிட்டுத் திணைக்களம் பொறுப்புக்கூற முடியுமா, அல்லது வேறு நபர்கள் பொறுப்புக்கூற முடியுமா? 6ஆம் தர மாணவர்களுக்கு நீங்கள் வழங்கும் தீர்வு என்ன? கடந்த கால புத்தகங்களையாவது அவர்களுக்கு வழங்குவீர்களா? புத்தகம் அகற்றப்பட்டதற்கான நிதி இழப்பீடு என்ன? ஒரு புத்தகம் கூட அகற்றப்படவில்லையா? என்றவாறான கேள்விகளை முன்வைத்தார். 

அதற்குப் பதிலளித்த பிரதமர், 6ம் தரத்திற்கான உத்தேச மறுசீரமைப்பு தொடர்பான முதலாம் தவணைக்கான புத்தகங்கள் அச்சிடப்பட்டுள்ளன. அவற்றில் அனைத்தையும் நாம் நிராகரிக்கவில்லை. 6ஆம் தரத்தை 2027 ஆம் ஆண்டு நடைமுறைப்படுத்த திட்டமிட்டுள்ளோம். 

அப்போது அந்தபுத்தகங்களைப் பயன்படுத்துவதற்கான வாய்ப்பு இருக்கின்றது. அவற்றை நாம் முற்றாக நிராகரிக்கவோ அல்லது வீசி எறியவோ இல்லை. அரசாங்கத்திற்கு நட்டம் ஏற்படாதவகையில் மேற்கொள்வதே நோக்கம். இதுவரை எந்தவொரு புத்தகத்தையும் நாங்கள் அகற்றவில்லை. 

2027 ஆம் ஆண்டு 6ஆம் தரத்தின் மறுசீரமைப்புக்கள் ஆரம்பிக்கப்படுகின்ற பொழுது அதனைப் பயன்படுத்த திட்டமிட்டு வருகின்றோம். ஒரேயொரு புத்தகத்தில் தான் பிரச்சினை இருந்தது. அதனைத் திருத்துவதற்கு மேற்கொள்ளப்படவேண்டிய நடவடிக்கைகளை நாம் முன்னெடுத்து வருகின்றோம். ஆகவே புத்தகங்களை அகற்றுவதற்கு எவ்வித தீர்மானங்களும் மேற்கொள்ளப்படவில்லை.

6ஆம் தர மாணவர்களுக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை. அவர்கள் வீதியில் இறங்கி நடக்கவுமில்லை. இவர்களுக்கு தான் வீதியில் இறங்கி நடக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. 6ஆம் தர பாடப்புத்தகங்களை நாம் அச்சிட்டு வருகின்றோம். களஞ்சியத்தில் இருந்ததை விநியோகித்திருக்கின்றோம். 

பெப்ரவரி நடுப்பகுதியில் அனைத்துப் பாடப்புத்தகங்களை விநியோகிக்க நடவடிக்கை எடுத்துள்ளோம். ஆசிரியர்கள் கற்பித்தல் நடவடிக்கைகளை ஆரம்பித்திருக்கின்றார்கள். அந்தப் பிள்ளைகளுக்கு வகுப்பறையில் இடம்பெறவேண்டியை இடம்பெற்றுக்கொண்டிருக்கின்றன. 

பிள்ளைகளுக்கு அநீதி ஏற்படாத வகையிலே இந்த ஆண்டுக்குள் கல்வி நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கு நாங்கள் பொறுப்பேற்போம் எனத் தெரிவித்தார்.

இப்படியான செய்திகளை அறிய தொடர்ந்தும் https://www.lanka4.com/ ஊடகத்துடன் இணைந்திருங்கள்



உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!