கட்சியின் இலக்கண பிழையை சரி செய்த நடிகர் விஜய்

#Actor #TamilCinema #Vijay #parties #Politician #Politics
Prasu
1 month ago
கட்சியின் இலக்கண பிழையை சரி செய்த நடிகர் விஜய்

கடந்த சில ஆண்டுகளாகவே அரசியலில் தீவிர ஆர்வம் காட்டி வந்த விஜய் கடந்த 2-ம் தேதி தனது கட்சியின் பெயரை தமிழக வெற்றி கழகம் என்று விஜய் அறிவித்தார்.

தேர்தல் ஆணையத்திலும் விஜய்யின் கட்சி பெயர் பதிவு செய்யப்பட்டது. மேலும் 2024 நாடாளுமன்ற தேர்தலில் தமிழக வெற்றி கழகம் போட்டியிடாது எனவும் இந்த தேர்தலில் எந்த கட்சிக்கும் ஆதரவில்லை என்றும் விஜய் கூறியிருந்தார்.

இதனிடையே தமிழக வெற்றி கழகம் பெயர் குறித்த சர்ச்சை தொடங்கியது. அதாவது தமிழக வெற்றிக்கழகமா அல்லது தமிழக வெற்றி கழகமா என்று பலரும் கேள்வி எழுப்பி வந்தனர்.

images/content-image/1708244538.jpg

தமிழறிஞர்களும், இலக்கியவாதிகளுக்கும் வெற்றி அருகே ‘க்’ என்ற ஒற்றெழுத்து வர வேண்டும் என்றும் தெரிவித்து வந்தனர்.

இந்த நிலையில் விஜய் தனது கட்சி பெயரை தமிழக வெற்றிக் கழகம் என்று மாற்றி சரி செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.