இலங்கை வருகிறார் ஈரானிய வெளிவிவகார அமைச்சர் ஹொசைன் அமீர் அப்துல்லாஹி!

#SriLanka #Iran #Tamilnews #sri lanka tamil news
Thamilini
2 years ago
இலங்கை வருகிறார் ஈரானிய வெளிவிவகார அமைச்சர் ஹொசைன் அமீர் அப்துல்லாஹி!

ஈரானிய வெளிவிவகார அமைச்சர் ஹொசைன் அமீர் அப்துல்லாஹி உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இலங்கைக்கு வருகைதரவுள்ளார். 

வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரியின் அழைப்பின் பேரில் ஈரான் வெளிவிவகார அமைச்சர் நாளை 19.02 முதல் 21 ஆம் திகதி வரை இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொள்ளவுள்ளார். 

இந்த விஜயத்தின் போது ஈரான் வெளிவிவகார அமைச்சர் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மற்றும் பிரதமர் தினேஷ் குணவர்தன ஆகியோரை சந்திக்கவுள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. 

ஈரானிய வெளிவிவகார அமைச்சர் மற்றும் தூதுக்குழுவினர் அமைச்சர் அலி சப்ரியுடன் வெளிவிவகார அமைச்சில் உத்தியோகபூர்வ பேச்சுக்களை நடத்த உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4