இந்தியாவில் பெண் ஒருவரின் துண்டிக்கப்பட்ட தலையுடன் வீதியில் நடமாடிய நபர் கைது!

#India #SriLanka #Tamilnews #sri lanka tamil news
Dhushanthini K
3 months ago
இந்தியாவில் பெண் ஒருவரின் துண்டிக்கப்பட்ட தலையுடன் வீதியில் நடமாடிய நபர் கைது!

இந்தியாவில் பெண் ஒருவரின் தலையை துண்டித்து தூக்கி செல்லும் காணொளி வைரலாக பரவி  வருகிறது. 

இந்தியாவின் உத்தரபிரதேசத்தில் வசிக்கும் அனில் குமார் என்ற 30 வயது நபர் தனது மனைவியின் துண்டிக்கப்பட்ட தலையை தூக்கிக்கொண்டு சாலையில் நடந்து சென்றுள்ளார். 

இவர்களுக்கு கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணமாகி இரண்டு குழந்தைகள் இருப்பது தெரியவந்துள்ளது.  

இவர்களுக்கிடையே வாக்குவாதம் முற்றி கைகலப்பு ஏற்பட்டதையடுத்து சந்தேகநபரின் கணவரே இந்த கொலையை செய்திருக்கலாம் என உள்ளூர் பொலிஸார் சந்தேகிக்கின்றனர். 

பின்னர், மனைவியின் தலை மற்றும் வெட்டுவதற்கு பயன்படுத்திய கத்தியுடன் வீதியில் பயணித்த சந்தேக நபரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.  

மேலும் அவரிடம் நடத்திய விசாரணையில், தான் சரணடைவதற்காக பொலிஸ் நிலையத்திற்கு வந்ததாக கூறியுள்ளதாக அறிய முடிகிறது. 

இவர்களது வீட்டில் கண்டெடுக்கப்பட்ட காதல் கடிதம் தொடர்பான விசாரணையின் போது ஏற்பட்ட வாக்குவாதத்தை அடுத்தே இந்த கொலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் சந்தேகிப்பதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.