சுகாதார தொழிற்சங்கங்களின் பிரச்சினைக்கு இன்று தீர்வு கிடைக்குமா?

#SriLanka #Tamilnews #sri lanka tamil news
Thamilini
2 years ago
சுகாதார தொழிற்சங்கங்களின் பிரச்சினைக்கு இன்று தீர்வு கிடைக்குமா?

கொடுப்பனவு பிரச்சினையை முன்வைத்து பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ள சுகாதார தொழிற்சங்கங்கள் இன்று (19.02) சுகாதார அமைச்சர் டொக்டர் ரமேஷ் பத்திரனவுடன் கலந்துரையாடல் ஒன்றை நடத்தவுள்ளனர். 

இது தொடர்பான கலந்துரையாடல் இன்று காலை 10.00 மணிக்கு நடைபெறவுள்ளதாக சுகாதார தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. 

அண்மையில், வைத்தியர்களுக்கான கொடுப்பனவு அதிகரிப்புக்கு எதிர்ப்புத் தெரிவித்து சுகாதார சேவையில் உள்ள பல்வேறு தொழிற்சங்கங்களைச் சேர்ந்த 72 தொழிற்சங்கங்கள் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டதுடன், சுகாதார அமைச்சருடன் பேச்சு வார்த்தை நடத்துவதாக எழுத்துமூல வாக்குறுதியளித்ததன் பேரில் தற்காலிகமாக வேலைநிறுத்தத்தை இடைநிறுத்தியிருந்தனர்.  

சுகாதார அமைச்சர் டொக்டர் ரமேஷ் பத்திரனுடனான கலந்துரையாடலில் தமது பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்காவிடின் மீண்டும் பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளதாக சுகாதார தொழிற்சங்க கூட்டமைப்பின் இணை அழைப்பாளர் ரவி குமுதேஷ் தெரிவித்துள்ளார்.  

அமைச்சருடன் பேச்சு வார்த்தை நடத்துவதாக எழுத்துமூலம் அளித்த வாக்குறுதியின் அடிப்படையில் போராட்டத்தை தற்காலிகமாக நிறுத்தி வைத்தனர்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4