திரையரங்கில் ஓடி வெற்றி தந்த குயின் எலிசபெத் தற்போது உலகமெங்கும் ஓடிடி தளங்களில்

#Cinema #TamilCinema #Film #release #World
Mugunthan Mugunthan
7 months ago
திரையரங்கில் ஓடி வெற்றி தந்த குயின் எலிசபெத் தற்போது உலகமெங்கும் ஓடிடி தளங்களில்

குயின் எலிசபெத் மலையாளம் மற்றும் தமிழ் என இரு மொழிகளிலும் ஒரு கலக்கலான பொழுதுபோக்கு காமெடிப் படமாக, இப்படம் உருவாகியுள்ளது. இதனை இயக்குநர் M பத்மகுமார் இயக்க, நடிகை மீரா ஜாஸ்மின் மற்றும் நடிகர் நரேன் கூட்டணி 15 வருட இடைவேளைக்குப் பிறகு, மீண்டும் இணைந்துள்ளது.

 திருமணமாகாத மிடில் ஏஜ் யுவதியான மீரா ஜாஸ்மின், தன்னைச் சுற்றி இருப்பவர்கள், தன்னை வெறுக்கும்படியான மனிதராக, யாருடைய துணையும் தேவையில்லை என வாழ்கிறார். 

நரேன் அவரது அன்பைப் பெறப் பல முயற்சிகள் செய்கிறார். பிஸினஸ் விசயமாக கோயம்புத்தூர் செல்லும் மீரா ஜாஸ்மினை அந்தப்பயணம் முழுதாக மாற்றுகிறது திருமணமாகாத ஒரு நடுத்தர வயதுப்பெண்ணின் வாழ்க்கையை, காதலைக் கண்டடையும் அவளின் பயணத்தை இந்தப்படம் அருமையான காமெடி கலந்து சொல்கிறது.

images/content-image/1708350614.jpg

 இயக்குநரும் தயாரிப்பாளருமான M.பத்மகுமார் கூறியதாவது… குயின் எலிசபெத் படத்திற்குத் திரையரங்குகளில் கிடைத்த வரவேற்பு உண்மையில் மிகப்பெரிய மகிழ்ச்சியைத் தந்தது. 

அவர்கள் தந்த அன்பு எங்களுக்கு மிகப்பெரிய உற்சாகத்தைத் தந்தது. இப்படைப்பு தற்போது ZEE5 வழியே உலகளாவிய பார்வையாளர்களிடம் சேரவுள்ளது. இப்படத்தின் டிஜிட்டல் பிரீமியருக்கு காதலர் தினத்தை விடச் சிறந்த தருணம் கிடைக்காது. 

உங்கள் இதயங்களைக் கொள்ளை கொள்ளும் இந்த காமெடி படத்தினை பார்வையாளர்களுடன் பகிர்ந்து சிரித்து மகிழ்வதில் இன்பமடைகிறோம்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!