சிகிச்சை முடிந்து மருத்துவமனையை விட்டு வெளியேறிய பிரியங்கா காந்தி

#India #Hospital #Treatment #Politician #PriyankaGandhi
Prasu
2 years ago
சிகிச்சை முடிந்து மருத்துவமனையை விட்டு வெளியேறிய பிரியங்கா காந்தி

ராகுல் காந்தி தலைமையிலான நடைபயணத்தில் பிரியங்கா காந்தி, பங்கேற்க திட்டமிட்டிருந்த நிலையில் அவருக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டது.

உடல் நீரிழப்பு மற்றும் வயிற்றுத் தொற்று பிரச்சினைகள் காரணமாக பிரியங்கா காந்தி டெல்லியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தார்.

இதுகுறித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருந்த பிரியங்கா காந்தி, “பாரத் ஜோடோ நியாய யாத்திரை உத்தரபிரதேசம் சென்றடைவதற்காக ஆவலுடன் காத்திருந்தேன். ஆனால் உடல் நலக்குறைவு காரணமாக இன்றே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட வேண்டியதாயிற்று. 

உடல்நலம் தேறியவுடன் யாத்திரையில் இணைவேன்” என்று தெரிவித்திருந்தார். இந்த நிலையில், சிகிச்சை முடிந்து இன்று மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பியதாக காங்கிரஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4