கனடாவில் வீடொன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் ஐவா் பலி
#Canada
#fire
#Canada Tamil News
#House
Mugunthan Mugunthan
1 year ago
கனடாவின் சஸ்கட்ச்வான் மாகாணத்தில் ஏற்பட்ட தீ விபத்தினால் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐவர் பலியானர்.
சஸ்கட்ச்வானின் டேவிட்சன் பகுதியில் அமைந்துள்ள வீடொன்றில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. இந்த சம்பவத்தில் 80 வயதான ஆண் ஒருவரும், 81 வயதான பெண்ணும் உயிரிழந்துள்ளனர்.
தீயை அணைக்கச் சென்ற தீயணைப்புப் படையினர் வீட்டிற்குள் பிரவேசித்த போது இரண்டு வயோதிபர்களை மீட்டு வைத்தியசாலையில் அனுமதித்த போதிலும் இருவரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.
தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்ததன் பின்னர் வீட்டில் மூன்று சிறுவர்களின் சடலங்களும் மீட்கப்பட்டதாக தீயணைப்புப் படையினர் தெரிவித்துள்ளனர். மேலதிக விசாரணைகள் இவ்விபத்து தொடர்பில் நடைபெறுகின்றது.