40 வயதைக்கடந்த ஆண்களிற்கு அத்தியாவசியமான விற்றமின்களும் கனியுப்புக்களும்
ஒவ்வொருவரின் ஆரோக்கிய தேவையும் வித்தியாசமானது. பெண்களை விட ஆண்களுக்கும் சில குறிப்பிட்ட வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் தேவை. இந்த வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் ஆண்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதோடு பல நோய்களிலிருந்து பாதுகாப்பையும் அளிக்கின்றன.
இந்த வைட்டமின்களையும் தாதுக்களையும் அவர்கள் எடுக்க பின்வரும் உணவுப்பொருட்களை உட்கொள்ளல் அவசியம்.
வைட்டமின் டி -
வைட்டமின் டி எலும்புகளை வலுப்படுத்தவும், இரத்தக் குழாய்களின் வீக்கத்தைக் குறைக்கவும் மிகவும் அவசியம். ஆனால் ஆண்கள் மட்டுமல்ல பெரும்பாலான பெரும்பாலான பெண்களுக்கு இது கிடைப்பதில்லை. ஏனெனில், நமது வாழ்க்கை முறை காரணமாக, விட்டமின் டி சத்தின் ஆதாரமான சூரிய ஒளியை நாம் பெற முடியவில்லை.
எனவே, வைட்டமின் டி பெற ஆண்கள் சால்மன், மீன், முட்டை, பால் பொருட்கள் மற்றும் காளான்கள் போன்றவற்றை உட்கொள்ள வேண்டும்.
மெக்னீசியம் -
மெக்னீசியம் தாது உடலின் சுமார் 300 செயல்முறைகளுக்கு தேவையானது . அதன் குறைபாடு இதய நோய்களின் அபாயத்தை அதிகரிக்கிறது. பெரும்பாலான ஆண்களுக்கு மெக்னீசியத்தின் தினசரி தேவையில் 80 சதவிகிதத்தை மட்டுமே பெற முடிகிறது என்பது பல ஆராய்ச்சிகளில் நிரூபிக்கப்பட்டுள்ளது.
நேவி பீன்ஸ் மற்றும் ஹாலிபட் மீன் ஆகியவை மெக்னீசியத்தின் சிறந்த ஆதாரங்கள். வைட்டமின் பி 12 - வைட்டமின் பி 12 இறைச்சி, கோழி, முட்டை, மீன், சீஸ், தயிர், பால் போன்றவற்றிலிருந்து பெறலாம்.
பொட்டாசியம் -
இந்த தாது உங்கள் செல்கள் குளுக்கோஸை ஆற்றலாகப் பயன்படுத்த உதவுகிறது. பெரும்பாலான ஆண்களுக்கு போதுமான பொட்டாசியம் கிடைப்பதில்லை. அதே நேரத்தில், பொட்டாசியம் உடலில் சோடியத்தின் விளைவைக் குறைக்கவும் உதவுகிறது. வெண்ணெய், உருளைக்கிழங்கு மற்றும் வாழைப்பழத்தை உட்கொள்வதன் மூலம் பொட்டாசியம் கிடைக்கும்.
அயோடின் -
தைராய்டு சுரப்பிக்கு டி 3 மற்றும் டி 4 ஹார்மோன்களை உற்பத்தி செய்ய அயோடின் தேவை. அதே நேரத்தில், இரண்டு ஹார்மோன்களும் கலோரிகளை எரிக்க உதவுகின்றன. உடலில் அயோடின் போதிய அளவு இல்லாததால் எடை அதிகரிப்பு மற்றும் அதிக சோர்வை ஏற்படுத்தும்.
முட்டை, பால் மற்றும் தயிர் ஆகியவற்றை உட்கொள்வதன் மூலம் அயோடின் பெறலாம்.