வெப்பமான காலநிலையால் சிறுவர்களுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்பு!

#SriLanka #weather #Tamilnews #sri lanka tamil news
Thamilini
2 years ago
வெப்பமான காலநிலையால் சிறுவர்களுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்பு!

நிலவும் வெப்பமான காலநிலையுடன் சிறுவர்களிடையே தோல் நோய்கள் அதிகரித்து வருவதாக சிறுவர் வைத்திய நிபுணர் டொக்டர் தீபால் பெரேரா தெரிவித்துள்ளார்.  

தற்போதைய நிலைமையை கருத்திற் கொண்டு சிறுவர்கள் சூரிய ஒளியில் ஈடுபடுவது மட்டுப்படுத்தப்பட வேண்டுமென நிபுணர் கலாநிதி தீபால் பெரேரா மேலும் குறிப்பிட்டுள்ளார்.

வெப்பமான காலநிலை காரணமாக நாட்டின் பல மாவட்டங்களுக்கு வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.  

வடமேற்கு மாகாணம் மற்றும் கம்பஹா, கொழும்பு, ஹம்பாந்தோட்டை, மொனராகலை ஆகிய மாவட்டங்களில் இன்று (22.02) வெப்பச் சுட்டெண் அதிகமாக இருக்கும் என திணைக்களம் தெரிவித்துள்ளது. 

இது தொடர்பில் மக்கள் அவதானம் செலுத்த வேண்டுமென வளிமண்டலவியல் திணைக்களத்தின் முன்னறிவிப்பு திணைக்களத்தின் பணிப்பாளர் அஜித் விஜேமான்ன தெரிவித்துள்ளார்.  

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4