மட்டக்களப்பில் மாமியாரை அடித்துக் கொன்ற மருமகன்!

#SriLanka #Batticaloa #Tamilnews #sri lanka tamil news
Thamilini
2 years ago
மட்டக்களப்பில் மாமியாரை அடித்துக் கொன்ற மருமகன்!

மட்டக்களப்பு வாழைச்சேனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட  வாகனேரி பகுதியில் மருமகனால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் மாமியார் உயிரிழந்துள்ளார்.

வாகனேரி கூளையடிச்சேனையைச் சேர்ந்த 45 வயதுடைய வைரமுத்து கோமதனி என்பவரே இவ்வாறு இவ்வாறு உயிரிழந்துள்ளார். 

உயிரிழந்தவரின் மகள் தொழில் வாய்ப்புக்காக வெளிநாடு சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.  

மருமகன் மதுபோதையில் மாமியாருடன் தினமும் சண்டையிட்டு வந்துள்ள நிலையில் சம்பவதினமான நேற்று இரவு (23.02) மதுபோதையில் சண்டையிட்டதாகவும், இதன்போது பாரிய பொருள் ஒன்றால் மாமியாரின் தலையை தாக்கியதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். 

குறித்த தாக்குதலில் அவர் உயிரிழந்துள்ளதுடன், தாக்குதல்தாரி தப்பியோடியுள்ளதாக கூறப்படுகிறது. 

சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர். 

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4