அயோத்தி ராமர் கோயில் - ஒரே மாதத்தில் 25 கோடி பணம் மற்றும் 25 கிலோ ஆபரணங்கள் நன்கொடை
#India
#Temple
#Jewelry
#donation
#money
#AyodhyaRamar
Prasu
1 year ago

உத்தரப் பிரதேசம் மாநிலம் அயோத்தியில் புதிதாக கட்டப்பட்டுள்ள ராமர் கோவிலுக்கு ஜனவரி 22ம் தேதி கும்பாபிஷேகம் நடைபெற்றது.
அதன் மறுநாள் முதல் பொது மக்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டது. அன்று முதல் நேற்று வரை ஒரு மாதத்தில் சுமார் ரூ.25 கோடி நன்கொடையாகவும், 25 கிலோ தங்கம் மற்றும் வெள்ளி ஆபரணங்கள் கிடைத்துள்ளதாக அறக்கட்டளை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து ராமர் கோயில் அறக்கட்டளையின் பொறுப்பாளர் பிரகாஷ் குப்தா கூறியிருப்பதாவது:- ரூ. 25 கோடியில் காசோலைகள், வரைவோலைகள் மற்றும் கோயில் அறக்கட்டளை அலுவலகத்தில் டெபாசிட் செய்யப்பட்ட பணம் மற்றும் நன்கொடை பெட்டிகளில் டெபாசிட் செய்யப்பட்டவை அடங்கும்.
இருப்பினும், அறக்கட்டளையின் வங்கிக் கணக்குகளில் நேரடியாக செய்யப்படும் ஆன்லைன் பரிவர்த்தனைகள் குறித்து எங்களுக்குத் தெரியாது.



