இன்றைய வானிலை முன்னறிவிப்பு!
#SriLanka
#weather
#Tamilnews
#sri lanka tamil news
Dhushanthini K
6 months ago
மேல், தென், சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களில் இன்று (25) மாலை அல்லது இரவு வேளையில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களில் சில இடங்களில் மழை பெய்யக் கூடும் என திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களிலும் பதுளை மாவட்டத்திலும் சில இடங்களில் காலை வேளையில் பனிமூட்டமான நிலை எதிர்பார்க்கப்படுகிறது.
இடியுடன் கூடிய மழை, தற்காலிக பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய ஆபத்துக்களை குறைத்துக்கொள்ள தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.