இலங்கை வானிலையில் ஏற்பட்ட தீடீர் மாற்றம்!

#SriLanka #weather #sri lanka tamil news
Thamilini
2 years ago
இலங்கை வானிலையில் ஏற்பட்ட தீடீர் மாற்றம்!

கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் இன்று (26.02) முதல் வறண்ட காலநிலையில் தற்காலிக மாற்றம் எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.  

நுவரெலியா, மாத்தளை மற்றும் பொலன்னறுவை மாவட்டங்களில் அவ்வப்போது மழை பெய்யும் என்றும் கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் பல இடங்களில் மழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.  

மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் கண்டி, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் மாலை அல்லது இரவில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் எனவும் முன்னுரைக்கப்பட்டுள்ளது. 

மத்திய மலையகத்தின் கிழக்கு சரிவுகளிலும் வடக்கு, வடமத்திய, தெற்கு, வடமேற்கு, ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் அவ்வப்போது மணிக்கு 30-40 கி.மீற்றர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என முன்னுரைக்கப்பட்டுள்ளது. 

இடியுடன் கூடிய மழை தற்காலிக பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய ஆபத்துக்களை குறைத்துக்கொள்ள தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு வளிமண்டலவியல் திணைகளம் மேலும் வலியுறுத்தியுள்ளது. 

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4