இன்றைய வானிலை முன்னறிவிப்பு!

#SriLanka #weather #Tamilnews #sri lanka tamil news
Thamilini
2 years ago
இன்றைய வானிலை முன்னறிவிப்பு!

நுவரெலியா, மாத்தளை மற்றும் பொலன்னறுவை மாவட்டங்களில் இன்று (27.02) அவ்வப்போது மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.  

கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் அனுராதபுரம் மாவட்டத்திலும் சில இடங்களில் மழை பெய்யக் கூடும் என திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. 

மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் கண்டி மற்றும் காலி மாவட்டங்களிலும் மாலை அல்லது இரவில் ஒரு சில இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும். 

அதேபோல் மத்திய மலையகத்தின் கிழக்கு சரிவுகளிலும் வடக்கு, வடமத்திய, வடமேற்கு, தெற்கு, ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் காற்றானது மணிக்கு. 30-40 கி.மீற்றர் வேகத்தில் வீசக்கூடும் எனவும் முன்னுரைக்கப்பட்டுள்ளது. 

இடியுடன் கூடிய மழையுடன் கூடிய தற்காலிக பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய ஆபத்துக்களை குறைத்துக்கொள்ள தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4