நீர் கட்டணத்திற்கான விலை சூத்திரத்தை விரைவில் நடைமுறைப்படுத்த திட்டம்!

#SriLanka #water #Tamilnews #sri lanka tamil news
Thamilini
2 years ago
நீர் கட்டணத்திற்கான விலை சூத்திரத்தை விரைவில் நடைமுறைப்படுத்த திட்டம்!

அடுத்த வருடம் ஜனவரி மாதம் முதல் நீர் கட்டணத்திற்கான விலை சூத்திரம் அறிமுகப்படுத்தப்படும் என நீர் வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சர்  ஜீவன் தொண்டமான் அறிவித்துள்ளார். 

ஜனாதிபதி ஊடக மையத்தில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்டுள்ள அவர் இவ்வாறு கூறியுள்ளார். 

இதன்போது மேலும் கருத்து வெளியிட்டுள்ள அவர், "தண்ணீர் கட்டணம் உயர்த்தப்படாது என்று தெளிவாக கூறியுள்ளோம். நுகர்வோரின் சுமையை எப்படி குறைக்கலாம் என அரசு ஆய்வு செய்து வருகிறது. 

குடிநீர் கட்டணத்திற்கான விலைச்சூத்திரம் தற்போது தயாரிக்கப்பட்டு உள்ளது. அது முறையாக வகுக்கும் வரை காத்திருக்கிறோம்” எனத் தெரிவித்துள்ளார். 

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4