இன்றைய வானிலை முன்னறிவிப்பு!

#SriLanka #weather #Tamilnews #sri lanka tamil news
Thamilini
2 years ago
இன்றைய வானிலை முன்னறிவிப்பு!

கிழக்கு, ஊவா மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் நுவரெலியா மற்றும் மாத்தளை மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. 

மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் கண்டி, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் மாலை அல்லது இரவு வேளைகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.  

மத்திய மலையகத்தின் கிழக்கு சரிவுகளிலும் வடக்கு, வடமத்திய, வடமேற்கு, தெற்கு, ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் காற்றானது 30-40 கி.மீற்றர் வரை வீசக்கூடும்.

இடியுடன் கூடிய மழை,தற்காலிக பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய அபாயங்களைக் குறைப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் மக்களைக் கோருகிறது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4