எல்ல பிரதேசத்தில் சுற்றுலாப் பயணிகளை தாக்க முற்பட்ட நபர் கைது!

#SriLanka #Tamilnews #sri lanka tamil news
Thamilini
2 years ago
எல்ல பிரதேசத்தில் சுற்றுலாப் பயணிகளை தாக்க முற்பட்ட நபர் கைது!

எல்ல பிரதேசத்தில் சுற்றுலா பயணிகள் மீது கற்களை வீச முற்பட்ட நபர் ஒருவரை எல்ல சுற்றுலா பொலிசார் கைது செய்து பண்டாரவளை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்திய பின்னர் மார்ச் 4 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். 

கித்துல் எல்ல பிரதேசத்தை சேர்ந்த ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.  

புகையிரத பாதையில் எல்ல பாறையை பார்வையிடச் சென்ற அமெரிக்க சுற்றுலாப் பயணிகள் குழுவை தாக்கப் போவதாக சந்தேக நபர் மிரட்டுவதை வெளிநாட்டுப் பெண் ஒருவர் படம் பிடித்துள்ளார்.  

சந்தேக நபர் தம்மை வழிமறிக்க முற்பட்டதாகவும், பின்னர் அதனைச் செய்ய மறுத்ததாகவும், இதனால் ஆத்திரமடைந்த அவர் தம்மை தாக்க முற்பட்டதாகவும் சுற்றுலாப் பயணிகள் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4