சாந்தனின் உடல் நாளை நீர்கொழும்பில் மீண்டும் பிரேத பரிசோதனைக்கு!

#SriLanka #Death #Airport
Mayoorikka
2 years ago
சாந்தனின் உடல் நாளை நீர்கொழும்பில் மீண்டும் பிரேத பரிசோதனைக்கு!

55 வயதான தில்லையம்பலம் சுதேந்திரராஜா என்ற இயற்பெயரைக் கொண்ட சாந்தன் கல்லீரல் செயலிழப்பால் மரணமடைந்த நிலையில் அவரது பூதவுடல் இன்று வெள்ளிக்கிழமை (1) நாட்டுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.

 இந்நிலையில் அவரது பூதவுடன் நீண்ட நேர தமதத்துக்குப் பின்னர் கட்டுநாயக்க விமானநிலையத்திலிருந்து பெறப்பட்ட நிலையில் உடலம் மீதான பிரேத பரிசோதனைக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளதால் பிரேத பரிசோதனைக்காக நீர் கொழும்பு வைத்தியசாலையில் உடலம் கையளிக்கப்பட்டுள்ளது.

 பிரேத பரிசோதனையின் பின்னராக உடலத்தை கையேற்ற பின்னராக யாழ்ப்பாணம் நோக்கி கொண்டு செல்லப்படவுள்ளதாக அவரது உறவினர்கள் அறிவித்துள்ளனர். சாந்தன் கடந்த 28ஆம் திகதி சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் சிகிச்சைகள் பலனின்றி மரணமடைந்திருந்த நிலையில் அவரது பூதவுடல் வெள்ளிக்கிழமை (1) விமானம் மூலம் சென்னையில் இருந்து கட்டுநாயக்கவுக்கு கொண்டுவரப்பட்டது.

 இதேவேளை, அவரது உடலம் யாழ்ப்பாணத்துக்கு கொண்டு சென்றதன் பின்னர் பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு இறுதிக் கிரியைகள் அவரது உடுப்பிட்டியில் உள்ள இல்லத்தில் நடைபெறவுள்ளது.

 விசேட அஞ்சலிகளை மேற்கொள்வதற்கான ஏற்பாடுகளை யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள் ஒன்றியமும், முன்னாள்போராளிகளின் நலன்புரிச்சங்கமும் முன்னெடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4