உள்ளுர் முட்டைகளின் விலையில் ஏற்பட்டுள்ள மாற்றம்!

#SriLanka #Egg #Tamilnews #sri lanka tamil news
Thamilini
2 years ago
உள்ளுர் முட்டைகளின் விலையில் ஏற்பட்டுள்ள மாற்றம்!

இலங்கையில் முட்டை ஒன்றின் உற்பத்திச் செலவு 30 ரூபாவாக இருந்தாலும், சந்தையில் உள்ளூர் முட்டை ஒன்றின் விலை 60 ரூபாவாக உயர்ந்துள்ளதாக அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். 

முட்டை உற்பத்தியாளர்களாலும், வியாபாரிகளாலும் அநியாயமாக மக்களைச் சுரண்டுவதைத் தடுக்க உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் முட்டைக்கு அதிகபட்ச சில்லறை விலையை விதிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் கூறுகிறார்.  

இந்த அதிகபட்ச சில்லறை விலை அடுத்த வாரம் நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபைக்கு சமர்ப்பிக்கப்படும் எனவும் அமைச்சர் மஹிந்த அமரவீர குறிப்பிட்டுள்ளார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4