யாழ்ப்பாண பல்கலைக்கழக வளாகத்தில் பறக்கவிடப்பட்டுள்ள கறுப்புக் கொடி!

#SriLanka #University #black flag
Mayoorikka
2 years ago
யாழ்ப்பாண பல்கலைக்கழக வளாகத்தில் பறக்கவிடப்பட்டுள்ள  கறுப்புக் கொடி!

மறைந்த சாந்தனுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் யாழ்ப்பாண பல்கலைக்கழக வளாகம் எங்கும் கறுப்புக் கொடி பறக்கவிடப்பட்டுள்ளது.

 இந்திய முன்னாள் பிரதமா் ராஜிவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்று விடுவிக்கப்பட்ட சாந்தன், திருச்சியில் உள்ள சிறப்பு முகாமில் தங்கவைக்கப்பட்டிருந்தாா். அவர் இலங்கை திரும்பலாம் என கடந்த ‍பெப்ரவரி 24ஆம் திகதி இந்திய மத்திய அரசு அனுமதி வழங்கியிருந்தது.

 இந்நிலையில், கல்லீரல் செயலிழப்பு காரணமாக சென்னை ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனையில் சாந்தன் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், கடந்த 28ஆம் திகதி மாரடைப்பு காரணமாக அவர் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டது.

 அவரின் உடல் இலங்கைக்கு தற்போது அனுப்பி வைக்கப்பட்டு நீர்கொழும்பு வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4