எரிபொருள் விலையில் திருத்தம் : வெளியான வர்த்தமானி அறிவித்தல்!

#SriLanka #Tamilnews #sri lanka tamil news
Thamilini
2 years ago
எரிபொருள் விலையில் திருத்தம் : வெளியான வர்த்தமானி அறிவித்தல்!

எரிபொருள் விலை இன்று (04.03) இரவு திருத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

பெப்ரவரி மாத இறுதியில் இந்த விலைத் திருத்தம் மேற்கொள்ளப்பட வேண்டியிருந்தாலும், அது இன்று இடம்பெறும் என இலங்கை பெற்றோலிய சட்டப்பூர்வ கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது. 

எவ்வாறாயினும், இன்று எரிபொருள் விலையில் பெரிய மாற்றம் இருக்காது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

எரிபொருள் விலை சூத்திரத்திற்கு அமைய எரிபொருள் விலையை மாதாந்தம் திருத்தியமைக்க கூட்டுத்தாபனம் நடவடிக்கை எடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது. 

இதேவேளை மின்சார விநியோகம் மற்றும் பெற்றோலியப் பொருட்கள் மற்றும் எரிபொருள் விநியோகம் அல்லது விநியோகிப்பதற்கான அத்தியாவசிய சேவைகள் தொடர்பான அனைத்து சேவைகளையும் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4