எரிபொருட்களுக்கான விலை குறைப்பு!

#SriLanka #Tamilnews #sri lanka tamil news #petrol
Thamilini
2 years ago
எரிபொருட்களுக்கான விலை குறைப்பு!

இலங்கையில் நேற்று (04.03) நள்ளிரவு  முதல் அமுலுக்கு வரும் வகையில் எரிபொருள் விலையில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. 

இதன்படி, 95 ஒக்டேன் பெற்றோல் லீற்றர் ஒன்றின் விலை 09 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளது. இதன் புதிய விலை 447 ரூபாவாகும். 

அதேபோல் சுப்பர் டீசல் 10 ரூபாவால் குறைப்பட்டுள்ளது. இதன் புதிய விலை 458 ரூபாவாகும். 

இதேவேளை மண்ணெண்ணெய் 05 ரூபாவால் குறைப்பட்டுள்ளது. இதன் புதிய விலை 257 ரூபாவாகும். இருப்பினும் 92 ஒக்டேன் ரக பெற்றோலின் விலையில் எவ்வித மாற்றங்களும் மேற்கொள்ளப்படவில்லை. 

அதேபோல் ஆட்டோ டீசல் விலையிலும் மாற்றம் ஏற்படவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதேவேளை சினோபெக் நிறுவனமும் நேற்று  நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் எரிபொருள் விலையை மாற்றியுள்ளது. 

இதன்படி, ஒக்டேன் 95 லீற்றர் ஒன்றின் விலையை 09 ரூபாவினால் குறைத்துள்ளதுடன், அதன் புதிய விலை 447 ரூபாவாகும். அத்துடன் சுப்பர் டீசல் லீற்றர் ஒன்றின் விலை 10 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதுடன் அதன் புதிய விலை 458 ரூபாவாகும். 

இதேவேளை, 92 ஒக்டேன் லீற்றர் பெற்றோல் மற்றும் ஆட்டோ டீசலின் விலையில் நிறுவனம் எவ்வித மாற்றமும் செய்யவில்லை. சினோபெக் 92 ரக எரிபொருள் லீற்றர் 368 ஆகவும், சினோபெக் ஆட்டோ டீசல் லீற்றர் 360 ரூபாவாகவும் உள்ளது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4