இந்திய மீனவர்களின் அத்துமீறலைக் கண்டித்து யாழில் போராட்டம்!

#SriLanka #Protest #Fisherman
Mayoorikka
2 years ago
இந்திய மீனவர்களின் அத்துமீறலைக் கண்டித்து  யாழில் போராட்டம்!

இந்திய மீனவர்களின் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு கோரி, வட மாகாண மீனவர்கள் யாழ்ப்பாணத்தில் இன்றையதினம் பேரணியொன்று இடம்பெற்றுள்ளது.

 இன்று காலை 10:30 மணியளவில் யாழ். மாவட்ட செயலகத்தின் முன்பாக ஆரம்பமான குறித்த பேரணி வடமாகாண ஆளுநர் செயலகத்தை சென்றடைந்ததுடன் அங்கு ஜனாதிபதிக்கான மகஜரை வடக்கு மாகாண ஆளுநர் அலுவலகத்தில் கையளிக்கப்பட்டதுடன் தொடர்ந்து பேரணியாக யாழிலுள்ள இந்திய துணைத் தூதரகத்தை நோக்கி சென்ற நிலையில் இந்திய துணைத்தூதரகத்திற்கு முன்னால் பெருமளவான பொலிஸார் குவிக்கப்பட்டதுடன் போராட்டகாரர்கள் தூதரகத்தினுள் உட் செல்லமுடியாதவாறு தடைகளையும் ஏற்படுத்தியிருந்ததுடன் ஐவரை மட்டும் தூதரகத்தினுள் செல்வதற்கு அனுமதி அளித்திருந்தனர். 

 இலங்கை மீனவர்களின் கடல் வளத்தை அழிக்காதே, தமிழக மீனவர்களின் அத்துமீறலை தடுத்து நிறுத்து, மீனவர்களின் வாழ்வாதாரத்தை அழிக்காதே உள்ளிட்ட பல்வேறு வாசகங்கள் எழுதப்பட்ட பதாகைகளைத் தாங்கியவாறு இலங்கை இந்திய அரசுகளுக்கு எதிராக கோசங்களை எழுப்பியவாறு போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். 

 குறித்த போராட்டத்தில் வடமாகாணத்தை சேர்ந்த கடற்றொழில் சமூக அமைப்புக்கள் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

images/content-image/2023/03/1709622360.jpg

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4