சட்டவிரோதமாக வைத்தியசாலை ஒன்றை நடத்திய போலி மருத்துவர் கைது

#SriLanka #Arrest #Hospital #doctor #Fraud
Prasu
2 years ago
சட்டவிரோதமாக வைத்தியசாலை ஒன்றை நடத்திய போலி மருத்துவர் கைது

பியகம பிரதேசத்தில் சட்டவிரோதமாக வைத்தியசாலை ஒன்றை நடத்திய போலி வைத்தியர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பியகம பொலிஸார் தெரிவித்தனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்டவர் பியகம பிரதேசத்தை சேர்ந்த 66 வயதுடையவராவார்.

இந்த வைத்தியசாலையை நடத்திச் சென்ற வைத்தியர் ஒருவர் கடந்த ஆண்டு வெளிநாடு சென்றுள்ள நிலையில் குறித்த சந்தேக நபர் ,வைத்தியர் என்ற போர்வையில் இந்த வைத்தியசாலையை தொடர்ந்தும் நடத்திச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

 இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பியகம பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4