உறுப்பினர் சேர்க்கைக்கான புதிய செயலியை அறிமுகப்படுத்திய நடிகர் விஜய்

#Actor #Vijay #App #Kollywood #Politician #Politics
Prasu
1 year ago
உறுப்பினர் சேர்க்கைக்கான புதிய செயலியை அறிமுகப்படுத்திய நடிகர் விஜய்

தமிழக வெற்றிக் கழகத்தின் உறுப்பினர் சேர்க்கைக்கான செயலியை கட்சியின் தலைவரும் நடிகருமான விஜய் இன்று அறிமுகம் செய்து வைத்துள்ளார்.

அதில் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் ஆளாக இணைந்துள்ளார். இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில், மகளிர் அனைவருக்கும் எனது அன்பான மகளிர் தின வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன். 

இந்த நன்னாளில் தமிழக வெற்றிக் கழகத்தின் உறுப்பினர் அட்டையை நான் பெற்றுக்கொண்டது குறித்துப் பெருமகிழ்ச்சி அடைகிறேன். பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்கிற அடிப்படைச் சமத்துவக் கொள்கையைப் பின்பற்றி, தமிழக வெற்றிக் கழகத்துடன் இணைந்து, மக்கள் பணி செய்ய விரும்பினால், நமது கட்சியின் உறுதிமொழியைப் படித்துவிட்டு, கீழே உள்ள உறுப்பினர் சேர்க்கை QR-Code இணைப்புகளைப் பயன்படுத்தி, மிகவும் சுலபமான முறையில் உறுப்பினர் அட்டையை உடனடியாகப் பெற்றுக்கொள்ளலாம் எனத் தெரிவித்திட்டுள்ளார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!