புகையிரத சேவை மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக அறிவிப்பு!

#SriLanka #Tamilnews #sri lanka tamil news
Thamilini
2 years ago
புகையிரத சேவை மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக அறிவிப்பு!

கரையோரப் பகுதியில் புகையிரத சேவை மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் அறிவித்துளய்ளது. 

 பராமரிப்புப் பணிகள் காரணமாக கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்தில் இருந்து வெள்ளவத்தை புகையிரத நிலையம் வரையான பகுதியில் ஒரு புகையிரத பாதையின் போக்குவரத்து மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

குறித்த பராமரிப்பு பணிகள் இன்று (09.03) நாளை (10.03) மற்றும் நாளை மறுதினம் (11.03) ஆகிய மூன்று நாட்களுக்கு  இடம்பெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

கொம்பனியா வீதி மற்றும் கொள்ளுப்பிட்டி புகையிரத நிலையங்களுக்கு இடையிலான பாலம் ஒன்றின் பராமரிப்பு பணிகள் மற்றும் நீர் வழங்கல் சபையின் குழாய் பதிக்கும் பணிகள் காரணமாகவே இந்த தடை விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது

. இதன் காரணமாக கரையோரப் பாதையில் ரயில் தாமதம் ஏற்படக் கூடும் என ரயில்வே திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4