யாழ்ப்பாணம் - சாவகச்சேரியில் ஆங்கிலேயர் காலத்தில் பணிப்புரிந்த ஒருவர் உயிரிழப்பு!

#SriLanka #Jaffna #Tamilnews #sri lanka tamil news
Thamilini
2 years ago
யாழ்ப்பாணம் - சாவகச்சேரியில் ஆங்கிலேயர் காலத்தில் பணிப்புரிந்த ஒருவர் உயிரிழப்பு!

யாழ்ப்பாணம் - சாவகச்சேரியில் 107 வயது முதியவர் ஒருவர் சுகவீனம் காரணமாக உயிரிழந்துள்ள நிலையில், அவரின் இறுதிக் கிரியைகள் இன்று (09.03) இடம்பெற்று நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளது. 

சாவகச்சேரி உதயசூரியன் பகுதியினை சேர்ந்த பூச்சி வேலுமுத்து என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.   

1917ஆம் ஆண்டு பிறந்த அவர் தன்னுடைய 107 ஆவது வயதில் கடந்த 07.03 அன்று உயிரிழந்துள்ளார். 

இவருக்கு 10 பிள்ளைகள், 75 பேரப்பிள்ளைகள், 25 பூட்டப்பிள்ளைகள் 5 கொள்ளுப் பேரப் பிள்ளைகள் உள்ளனர்.  

கடந்த 1 மாத காலமாக சுகயீனமுற்ற நிலையில் உயிரிழந்துள்ளார். இலங்கையில் ஆங்கிலேயர் ஆண்ட காலப்பகுதியில் இவர் பணிபுரிந்தமை குறிப்பிடத்தக்கது.  

images/content-image/1709956624.jpg

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4