சிகிச்சை முடிந்து மருத்துவமனையை விட்டு வெளியேறிய நடிகர் அஜித்

#Actor #TamilCinema #Hospital #Surgery #Kollywood
Prasu
1 year ago
சிகிச்சை முடிந்து மருத்துவமனையை விட்டு வெளியேறிய நடிகர் அஜித்

நடிகர் அஜித்குமார் கடந்த 2 நாட்களுக்கு முன் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். 

அப்போது அவருக்கு எடுக்கப்பட்ட பரிசோதனையில் அவரது காதுக்கு கீழ் பகுதியில் இருந்த கட்டி கண்டறியப்பட்டு அரை மணிநேரத்தில் நவீன சிகிச்கையின் மூலம் டாக்டர்கள் அகற்றினர்.

இதையடுத்து மருத்துவர்களின் கண்காணிப்பில் இருந்த அஜித் பூரண நலம் பெற்று வீடு திரும்ப வேண்டும் என அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, இசையமைப்பாளர் யுவன்சங்கர் ராஜா ஆகியோர் தெரிவித்து இருந்தனர்.

இந்நிலையில், நடிகர் அஜித் சிகிச்சை முடிந்து இன்று அதிகாலை வீடு திரும்பியுள்ளதாக அவரது மேலாளர் சுரேஷ் சந்திரா தெரிவித்துள்ளார்.

 மேலும், அடுத்த வாரம் வெளிநாட்டில் நடக்கும் 'விடாமுயற்சி' திரைப்படத்தின் படப்பிடிப்புக்கு நடிகர் அஜித் செல்ல உள்ளார் என்றும் கூறியுள்ளார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!