(UPDATE) ரம்பேவ விபத்து தொடர்பில் 18 வயதான சாரதி கைது!

#SriLanka #Arrest #Tamilnews #sri lanka tamil news
Thamilini
2 years ago
(UPDATE) ரம்பேவ விபத்து தொடர்பில் 18 வயதான சாரதி கைது!

ரம்பேவ பிரதேசத்தில் இன்று (09) காலை இடம்பெற்ற விபத்து சம்பவம் தொடர்பில் 18 வயதான சாரதி கைது செய்யப்பட்டுள்ளார். 

சந்தேகநபருக்கு ஓட்டுனர் உரிமம் இல்லை என்றும் கூறப்படுகிறது. 

குறித்த விபத்தில் 16, 19 மற்றும் 21 வயதுடைய மூன்று இளைஞர்கள் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். 

 மூவரும் பிஹிம்பியகொல்லேவ பிரதேசத்தை சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது. விபத்தில் சிக்கிய இரண்டு சிறுமிகளும் அனுராதபுரம் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

 ரம்பேவயில் இருந்து அநுராதபுரம் நோக்கி பயணித்த கெப் வண்டியொன்று வீதியில் பயணித்த ஐந்து பேர் மீது மோதியதில் இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4