ஜனாதிபதியின் அழைப்பை ஏற்றது தமிழ் தேசிய கூட்டமைப்பு!

#SriLanka #Ranil wickremesinghe #Tamilnews #sri lanka tamil news
Thamilini
2 years ago
ஜனாதிபதியின் அழைப்பை ஏற்றது தமிழ் தேசிய கூட்டமைப்பு!

சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகளுடனான கலந்துரையாடலில் பங்கேற்குமாறு,  அரசியல் கட்சிகளுக்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க விடுத்த அழைப்பை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஏற்றுக்கொண்டுள்ளது. 

 சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களுடனான கலந்துரையாடலுக்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அழைப்பு விடுத்துள்ளார். 

குறித்த கட்சிகளுக்கு உத்தியோகபூர்வ அழைப்பு விடுக்கப்பட்டுள்ள போதிலும், ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் சில பாராளுமன்ற உறுப்பினர்கள் புறக்கணிப்பதாக அறிவித்துள்ளனர். 

எவ்வாறாயினும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உரிய அழைப்பை ஏற்று அக்கட்சியின் பிரதிநிதி ஒருவரை இதில் பங்கேற்க வைக்க தீர்மானித்துள்ளது.  

அரசாங்க நிதி தொடர்பான குழுவின் தலைவர் கலாநிதி ஹர்ஷ டி சில்வாவின் வேண்டுகோளுக்கு இணங்க இந்த கலந்துரையாடல் இடம்பெற்றதாகவும், அவரின் பங்கேற்பு தற்போது நிச்சயமற்ற நிலையில் உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. 

இந்த விடயம் தொடர்பில் கட்சியுடன் கலந்துரையாடி இறுதி தீர்மானம் எடுப்பதாக பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4