வெளிநாட்டிற்கு அனுப்புவதாக கூறி பணமோசடி செய்த பெண் கைது!

#SriLanka #Tamilnews #sri lanka tamil news
Thamilini
2 years ago
வெளிநாட்டிற்கு அனுப்புவதாக கூறி பணமோசடி செய்த பெண் கைது!

வெளிநாட்டிற்கு அனுப்புவதாக கூறி பலரிடம் பணமோசடி செய்த பெண் ஒருவர் யாழில் கைது செய்யப்பட்டுள்ளார். 

யாழ்ப்பாணத்தில் முகவர் நிலையம் ஒன்றை நடத்தி அதன் மூலம் 60 இலட்சம் ரூபாய் வரை மோசடி செய்துள்ளதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. 

குறித்த குற்றச்சாட்டின் அடிப்படையில் ஊரேழு பகுதியைச் சேர்ந்த 27 வயதான யுவதி ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளார். 

பணத்தை வழங்கியவர் தனது வெளிநாட்டு, பயண ஏற்பாடுகள் தாமதமாகி வந்தமையால், அப்பெண் மீது சந்தேகம் கொண்டு யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார். 

 முறைப்பாட்டின் பிரகாரம் விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார், அப்பெண்ணை கைது செய்து மேலதிக விசாரணைகளை முன்னெடுத்தனர். 

 அதன் போது அவரது வங்கி கணக்கு இலக்கம் ஊடாக சுமார் 4 கோடி ரூபாவுக்கும் அதிகமான பண பரிமாற்றங்கள் இடம்பெற்றுள்ளதனை கண்டுபிடித்துள்ளனர். 

 கொழும்பு உள்ளிட்ட இதர பகுதிகளில் வெளிநாட்டுக்கு ஆட்களை அனுப்பி வைக்கும் முகவர்களாக செயற்படும் மோசடியாளர்கள் யாழ்ப்பாணம் உள்ளிட்ட மாவட்டங்களில் தமக்கான முகவர்களாக சிலரை நம்பிக்கைக்காக அமர்த்தி அவர்கள் ஊடாக பெரும் பணம் மோசடியில் ஈடுபட்டு  வந்துள்ளமை தெரியவந்துள்ளது. 

இது தொடர்பிலான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர். 

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4