மன்னாரில் 17 வயது மாணவர் ஒருவர் மாயம்!

#Mannar #Tamilnews #sri lanka tamil news
Thamilini
2 years ago
மன்னாரில் 17 வயது மாணவர் ஒருவர் மாயம்!

மன்னார் நானாட்டான் பிரதேச செயலகப் பிரிவில் உள்ள அச்சங்குளம் கிராமத்தில் வசிக்கும் சந்திரசேகர் நிலோஜ் ரோக்க்ஷன் என்ற 17வயது மாணவன் நேற்று (11.03) முதல் காணாமல்போயுள்ளதாக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. 

குறித்த மாணவனின் பெற்றோர் முருங்கன் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.  

அச்சங்குளம் கிராமத்தில் உள்ள வீட்டில் இருந்து வெளியில் சென்ற நிலையிலே குறித்த மாணவன் இது வரை வீடு திரும்பவில்லை என பெற்றோர் முருங்கன் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.  

காணாமல் போன மாணவன் நானாட்டான் பிரதேசத்தில் உள்ள பிரபல பாடசாலையில் உயர் தரத்தில் கல்வி கற்று வருவதாக தெரிய வருகின்றது. குறித்த மாணவன் பற்றிய தகவல் தெரிந்தவர்கள் 0774722506 என்ற இலக்கத்துடன் தொடர்பு கொள்ளுமாறு பெற்றோர் கேட்டுக் கொண்டனர்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4