சபாநாயகரை சந்தித்த வெஸ்ட்மினிஸ்டர் பணிப்பாளர்!

#SriLanka #speaker
Mayoorikka
2 years ago
சபாநாயகரை  சந்தித்த வெஸ்ட்மினிஸ்டர் பணிப்பாளர்!

ஜனநாயகத்துக்கான வெஸ்ட்மினிஸ்டர் மன்றத்தின் ஆசியா, பசிபிக் மற்றும் அமெரிக்கா பிராந்திய பணிப்பாளர் மதிவ் ஹெட்ஜஸ், சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவை பாராளுமன்றத்தில் சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

 இதன்போது பாராளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர மற்றும் ஜனநாயகத்துக்கான வெஸ்ட்மினிஸ்டர் மன்றத்தின் இலங்கை பணிப்பாளர் சஞ்சே விக்னராஜா ஆகியோரும் கலந்துகொண்டனர்.

 இலங்கை பாராளுமன்றத்துடன் நெருக்கமாக பணியாற்றும் ஜனநாயகத்துக்கான வெஸ்ட்மினிஸ்டர் மன்றத்தினால் பாராளுமன்றத்திலுள்ள அரசாங்க நிதி பற்றிய குழு, அரசாங்க பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழு, அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழு உள்ளிட்ட குழுக்களின் செயற்பாடுகளுக்கு வழங்கும் ஒத்துழைப்பை சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன இதன்போது பாராட்டினார்

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4