GOAT திரைப்பட குழுவுடன் இணையும் பிரபல பாடலாசிரியர்கள்

#TamilCinema #Vijay #Movie #Kollywood #Song #writer
Prasu
1 year ago
GOAT திரைப்பட குழுவுடன் இணையும் பிரபல பாடலாசிரியர்கள்

நடிகர் விஜய் நடிக்கும் "தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்" (GOAT) படத்தை வெங்கட் பிரபு இயக்கி வருகிறார். 

சை ஃபை ஃபிக்ஷன் கதைக்களத்தில் இப்படம் உருவாகவுள்ளது. மீனாக்ஷி சவுத்ரி கதாநாயகியாக நடிக்க இருக்கிறார். ஏ.ஜி.எஸ் நிறுவனம் "கோட்" படத்தை தயாரிக்கிறது. விஜய் இப்படத்தில் இருவேடங்களில் நடிக்கிறார். 

யுவன் ஷங்கர் ராஜா இப்படத்திற்கு இசையமைக்கவுள்ளார். நேற்று இப்படத்தின் ஒரு பாடலை விஜய் பாடி இருக்கிறார் எனவும், மே மாதம் அப்பாடல் வெளியாகும் என்ற தகவல் வெளியாகியது.

இப்போது அப்படத்தின் மற்றொரு தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி இப்படத்தின் பாடல்களை கங்கை அமரன், மதன் கார்கி மற்றும் கபிலன் வைரமுத்து ஆகியோர் எழுதப் போவதாகவும், எஞ்சாய் எஞ்சாமி புகழ் அறிவு ஒரு பாடலை எழுதப் போவதாக கூறப்படுகிறது. 

இது தொடர்பாக அதிகாரப்பூர்வத் தகவல்கள் விரைவில் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!