மம்தா பானர்ஜி விரைவில் விரைவில் குணமடைய வாழ்த்துகிறேன் - ஸ்டாலின்

#India #Accident #Women #Hospital #ChiefMinister #M.K.Stalin
Prasu
1 year ago
மம்தா பானர்ஜி விரைவில் விரைவில் குணமடைய வாழ்த்துகிறேன் - ஸ்டாலின்

மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி சாலை விபத்தில் சிக்கியதாக தகவல் வெளியாகி உள்ளது. 

இதில், மம்தா பானர்ஜியின் நெற்றியில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. நெற்றியில் ரத்த காயத்துடன் மயங்கிய நியைில் இருக்கும் மம்தாவின் புகைப்படங்கள் வெளியாகி உள்ளது.

இந்நிலையில், மம்தா விரைவில் குணம் பெற வேண்டும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அந்த பதிவில் கூறியிருப்பதாவது:- மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜிக்கு ஏற்பட்ட சாலை விபத்து குறித்து அறிந்து அதிர்ச்சியும் ஆழ்ந்த கவலையும் அடைந்தேன்.

இந்த கடினமான நேரத்தில் என் எண்ணங்கள் அவருடன் இருக்கும். அவர் விரைவில் குணமடைய வாழ்த்துகிறேன்.

இவ்வறு அவர் குறிப்பிட்டுள்ளார். இதுகுறித்து கனிமொழி எம்.பி தனது எக்ஸ் பக்கத்தில், " மேற்கு வங்க முதல்வரின் சாலை விபத்து பற்றிய செய்தி அதிர்ச்சியாக உள்ளது. அவள் விரைவில் குணமடைவார் என்று நம்புகிறேன்" என்றார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!