நெடுங்கேணி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பாலியல் சார்ந்த மனநோய்க்கு உட்பட்டவரா? கஜேந்திரன் எம்.பி கேள்வி

#SriLanka #Police #Protest
Mayoorikka
2 years ago
நெடுங்கேணி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பாலியல் சார்ந்த மனநோய்க்கு உட்பட்டவரா? கஜேந்திரன் எம்.பி கேள்வி

நெடுங்கேணி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பாலியல் சார்ந்த மனநோய்க்கு உட்பட்டவரா என நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரன் கேள்வி எழுப்பியுள்ளார்.

 வெடுக்குநாறி மலையில் கைது செய்யப்பட்ட 8 பேரையும் விடுவிக்க வலியுறுத்தியும், பொலிசாரின் அராஜகத்தை கண்டித்தும் வவுனியா, நெடுங்கேணியில் இன்று (15.03) இடம்பெற்ற ஆர்ப்பாட்டப் பேரணியின் பின் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,

 கைது செய்யப்பட்டவர்களின் ஒருவரின் வேட்டியை உருவி அரை நிர்வாணமாக கொண்டு வந்திருந்தார்கள். நெடுஙகேணி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி வக்கிர புத்தி கொண்டவர். ஏனெனில் ஆண் ஒருவரை அரை நிர்வாணமாக கொண்டு வருகின்ற போது பொலிஸ் நிலையத்தில் பெண் பொலிசார் உள்ளார்கள். 

பொதுமக்கள், பெண்கள் வெளியில் நிற்கிறார்கள். அப்படி இருக்கையில் அவர்களுக்கு முன்னே அரை நிர்வாணமாக கொண்டு செல்ல நெடுங்கேணி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி அனுமதிக்கின்றார் என்றால் அவரிடம் ஒரு மனநோய் இருக்க வேண்டும். அப்படிப்பட்ட இனவெறி, மதவெறி, பாலியல் சார்ந்த மனநோய்க்கு உட்பட்டவரா என்ற கேள்வி எழுகின்றது. 

மிருக குண்ம் கொண்ட ஒருவரால் கைது செய்யப்ப்ட்ட 8 பேரும் மறுநாள் நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்ட பின்னர் தான் குற்றச்சாட்டுக்களை தேடிப் பிடித்தார்கள். தொல்பொருள் சின்னம் எவற்றுக்கும் பாதிப்பு ஏற்படவில்லை. பொய்யான அடிப்படையில் தொல்பொருள் திணைக்கள பணிப்பாளரிடம் அறிக்கை பெற்று அவர்களைது பிணையை நிறுத்தியுள்ளார்கள். வெடுக்குநாறி மலையை சைவர்களிடம் இருந்து பறித்து எடுப்பதற்கான முயற்சியே நடைபெறுகிறது. தொல் பொருள் அமைச்சரும் இதன் சூத்திரதாரியாக இருந்து செயற்படுகின்றார். 

அவர் இனவெறிச் செயற்பாட்டை கடந்த காலங்களில் மேற்கொண்டவர். குருந்தூர் மலையில் அகழ்வு செய்யப் போகின்றோம் எனப் பொய் சொல்லி அங்கு பௌத்த விகாரையை நிறுவியவர். அதற்கு முழு சூத்திரதாரி விதுர விக்கிரமநாயக்க என்ற தொல்பொருள் அமைச்சர். அதே அமைச்சர் தான் தற்போது இங்கே வன்முறைகளுக்கு காரணமாக இருக்கிறார். தமிழ் - சிங்கள கலவரத்தை ஏற்படுத்த முயல்கிறார். இந்த இனவெறிக்கு எதிராக இந்த ஆர்ப்பாட்டம் இடம் பெற்றது. 5 ஆவது நாளாக கைது செய்யப்பட்ட 8 பேரில் 5 பேர் உண்ணாவிரமதம் இருகிறார்கள். 

அவர்களது உடல் நிலை பாதிப்படைகிறது. வவுனியாவில் உள்ள மனிதவுரிமை ஆணைக்குழு அதிகாரி இனவெறி பிடித்தவராக இருக்கிறார். மனிதவுரிமை ஆணைக்குழுவுக்கு தெரியப்படுத்தியும் இதுவரை கைதிகளை பார்வையிடவில்லை. குடும்பத்தினரை சந்திக்கவில்லை. அவர்களும் இந்த ஒடுக்குமுறைக்கு துணை போகிறார்கள். வவுனியா மனிதவுரிமை ஆணைக்குழு அதிகாரி பதவி விலக வேண்டும். 

அதன் கொழும்பு அலுவலகம் போரினவாத நிகழ்ச்சி நிரலில் இயங்குகின்றதா? என்ற கேள்வியும் எழுகிறது. நாளைய தினம் (16.03) காலை 10 மணிக்கு வவுனியா கந்தசாமி ஆலயத்தின் முன் நடைபெறும் போராட்டத்திலும் அனைவரும் கலந்து கொண்டு அவர்களின் விடுதலைக்காக குரல் கொண்டுக வேண்டும் எனத் தெரிவித்தார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4