சிறையில் உள்ளோர் உடல்நிலை மோசம்! மனிதஉரிமை அலுவலகத்தை முற்றுகையிட்ட உறவுகள்

#SriLanka #Prison #Human Rights
Mayoorikka
2 years ago
சிறையில் உள்ளோர் உடல்நிலை மோசம்! மனிதஉரிமை அலுவலகத்தை முற்றுகையிட்ட உறவுகள்

வவுனியா வெடுக்குநாறி மலை ஆதிசிவன் ஆலயத்தில் கைதுசெய்யப்பட்ட 8பேரின் உறவினர்கள் இன்றையதினம் வவுனியா மனித உரிமைகள் ஆணைக்குழுவின் பிராந்திய அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

 குறித்த உறவுகள் இன்றையதினம் சிறைச்சாலைக்கு சென்று அவர்களது உறவினர்களை சந்தித்திருந்தனர். இதன்போது ஐவர் உண்ணாவிரதப்போராட்டத்தை மேற்கொள்வதால் அவர்களது உடல்நிலை மோசமடைந்து செல்வதாக தெரிவித்தனர். இதனையடுத்து பிராந்தியமனிதஉரிமைகள் அலுவலகத்திற்கு சென்றனர்.

images/content-image/2023/03/1710523371.jpg

அங்கு நிறைவேற்று அதிகாரிகள் எவரும் இருக்கவில்லை. கடமையில் இருந்த அலுவலர்களும் மக்களுடன் கலந்துரையாடாமல் அலுவலகத்தின் உள்ளே இருந்தனர். இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் ஆணைக்குழு அலுவலகம் முன்பாக போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து ஒரு மணிநேரத்தின் பின்னர் அலுவலர்கள் வருகைதந்து பாதிக்கப்பட்ட மக்களுடன் கலந்துரையாடியதுடன், நாளையதினம் சிறைச்சாலைக்கு சென்று தடுப்பில் உள்ளவர்களை நேரடியாக பார்வையிடுவதாக உறுதிஅளித்திருந்தனர். 

images/content-image/2023/03/1710523388.jpg

 போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் ஆணையாளர் தூக்குகிறாரா,இந்த அலுவலகம் சிங்களவருக்குமட்டுமா. ஏன் பக்கச்சார்பாக செயற்படுகிறாய்,மனித உரிமை ஆணைக்குழுவே பதில் சொல் போன்ற கோசங்களை எழுப்பியிருந்தனர்.

images/content-image/2023/03/1710523403.jpg

images/content-image/2023/03/1710523414.jpg

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4