இன்றைய வானிலை முன்னறிவிப்பு!

#SriLanka #weather #Tamilnews #sri lanka tamil news
Thamilini
2 years ago
இன்றைய வானிலை முன்னறிவிப்பு!

 நாடளாவிய ரீதியில் பிரதானமாக இன்று (17.03)  வறண்ட காலநிலை நிலவும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. 

சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களிலும் காலி மற்றும் களுத்துறை மாவட்டங்களிலும் சில இடங்களில் காலை வேளையில் பனிமூட்டமான நிலை எதிர்பார்க்கப்படுவதாக திணைக்களம் தெரிவித்துள்ளது.  

இதேவேளை, நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் பிரதானமாக மழையற்ற காலநிலை நிலவும் என முன்னுரைக்கப்பட்டுள்ளது. 

 காங்கேசன்துறையிலிருந்து திருகோணமலை ஊடாக மட்டக்களப்பு வரையான கடற்பரப்புகளில் காற்று தென்கிழக்கிலிருந்து வீசும் என்றும்,  மட்டக்களப்பில் இருந்து பொத்துவில் மற்றும் ஹம்பாந்தோட்டை முதல் மாத்தறை வரையான கடற்பரப்புகளில் காற்று வடகிழக்கில் இருந்து வீசும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

காற்றின் வேகம் மணிக்கு kmph (15-30) வரை இருக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4