மலேசியாவில் இலங்கையர்கள் உள்பட நூற்றிற்கும் மேற்பட்டோர் கைது!

#SriLanka #Malasia #Tamilnews #sri lanka tamil news
Thamilini
2 years ago
மலேசியாவில் இலங்கையர்கள் உள்பட நூற்றிற்கும் மேற்பட்டோர் கைது!

மலேசியாவில் முறையான விசா இன்றி தங்கியிருந்த இலங்கையர்கள் உட்பட 158 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.  

மலேசிய குடிவரவு திணைக்களத்தினால் அந்நாட்டிலுள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் மேற்கொள்ளப்பட்ட விசேட சோதனையின் போதே குறித்த குழுவினர் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.  

வெளிநாடுகளைச் சேர்ந்த 358 பேர் சோதனைக்கு உட்படுத்தப்பட்டதாகவும், அவர்களில் 158 பேருக்கு மலேசியாவில் தங்குவதற்கு உரிய விசா இன்றி தங்கியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இவர்களில் 83 ஆண்கள், 54 பெண்கள், 08 சிறுவர்கள் மற்றும் மூன்று குழந்தைகள் உள்ளடங்குவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

கைது செய்யப்பட்டவர்களில், இலங்கையர்களைத் தவிர, இந்தோனேசியா, நேபாளம், மியன்மார், பங்களாதேஷ், சீனா, பாகிஸ்தான் மற்றும் வியட்நாம் ஆகிய நாடுகளைச் சேர்ந்தவர்களும் உள்ளனர்.

 இவர்களில் பெரும்பாலானோர் சுற்றுலா விசாவில் நாட்டிற்கு வந்து குடியிருப்புகளை வாடகைக்கு எடுத்து பல்வேறு வேலைகளில் ஈடுபட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது. 

சிலர் மலேசியாவில் ஒரு வருடத்திற்கும் மேலாக சட்டவிரோதமாக தங்கியிருந்து பல்வேறு வேலைகளில் ஈடுபட்டு வருவது குடிவரவுத் திணைக்களத்தின் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4