முதலில் ஜனாதிபதி தேர்தலுக்கு தயாராகுங்கள் : ரணில் அறிவிப்பு!

#SriLanka #Tamilnews #sri lanka tamil news
Thamilini
2 years ago
முதலில் ஜனாதிபதி தேர்தலுக்கு தயாராகுங்கள் : ரணில் அறிவிப்பு!

முதலில் ஜனாதிபதி தேர்தலுக்கு தயாராகுமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அமைச்சரவைக்கு அறிவித்துள்ளார்.  

நேற்று (18.03) பிற்பகல் இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்திலேயே ஜனாதிபதி இதனை அறிவித்துள்ளார். 

தற்போதைய அபிவிருத்திப் பணிகள் உள்ளிட்ட அரசாங்கத்தின் பணிகளை விரைவில் முடித்து ஜனாதிபதி தேர்தலுக்கு தயாராகுமாறு ஜனாதிபதி அமைச்சரவையில் அறிவித்துள்ளார்.  

இதேவேளை, தமிழ் உட்பட மூன்று மொழிகள் பேசக்கூடிய ஒருவரை ஜனாதிபதி வேட்பாளராக முன்னிறுத்த வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்னேஸ்வரம் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி தேர்தலை பிற்போடுவதற்கு அரசியலமைப்பு அனுமதியளிக்கவில்லை என பாராளுமன்ற உறுப்பினர்  நாலக கொடஹேவா தெரிவித்தார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4