கிணற்றுக்குள் தவறி விழுந்து உயிரிழந்த 24 வயது இளம்பெண்

#SriLanka #Vavuniya #Death #Hospital #Girl #pond
Prasu
2 years ago
கிணற்றுக்குள் தவறி விழுந்து உயிரிழந்த 24 வயது இளம்பெண்

வவுனியா, சமனங்குளம் பகுதியில் தோட்ட கிணற்றில் தவறி விழுந்து இளம் யுவதி ஒருவர் மரணமடைந்துள்ளதாக சிதம்பரபுரம் பொலிசார் தெரிவித்தனர்.

வவுனியா, சமனங்குளம் பகுதியில் வசித்து வரும் இளம் யுவதி ஒருவர் கிணற்று மோட்டார் சுவிச்சை போட்ட போது அதன் குழாய் கழன்றமையால் அதனை பூட்ட முயற்சித்த போது கிணற்றுக்குள் தவறி விழுந்துள்ளார்.

தொடர்ந்து மோட்டார் இயங்கிக் கொண்டிருப்பதை அவதானித்த அயல் வீட்டார் கிணற்றடிக்கு சென்று பார்த்த போது குறித்த இளம் யுவதி கிணற்றில் விழுந்து இருந்ததை அவதானித்துள்ளனர். 

இதனையடுத்து அயலவர்களின் உதவியுடன் யுவதியை மீட்டு வவுனியா வைத்தியசாலையில் அனுமதித்த போது அவர் மரணமடைந்து விட்டதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.

 சம்பவத்தில் வவுனியா, சமனங்குளம் பகுதியைச் சேர்ந்த 24 வயதுடைய தவரூபன் லக்சிகா என்ற யுவதியே மரணமடைந்தவராவார். சம்பவம் தொடர்பில் சிதம்பரபுரம் பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4